மனைவிக்கு கடிதங்கள் 2

கடிதம் 2

இங்கே குளிர் அதிகமாகிடுச்சு, அதீத குளிரில் அடர்த்தியான போர்வைக்குள் உன் கதகதப்பை தேடுகிறேன். தேடி தேடியே உறங்குகிறேன், காலையிலும் அந்த கதகதப்பு இல்லயே என்று ஏமாற்றம் அடைகிறேன். ‘ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் ‘ வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். சில காதல் வரிகளுக்குள்  வாழ்க்கை அடங்கிவிடுகிறது.

எட்டு திக்கும் மினுமினுக்கும் கடை பலகை வெளிச்சம். அண்ணார்ந்து பார்த்தால் நிலவு கூட தெரியாத உயர் அடுக்கு மாடிகள். ‘ அஹா…….’ என்று காற்றை கிழித்துக்கொண்டு போகும் கார்கள். அந்த சாலையின் நடைமெடைக்கு அருகில் பேட்டரி விளக்கின் வெளிச்சத்திலும், அதன் சூட்டிலும், உத காற்றில் நாம் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், அனல் பறக்கும் இரும்பு கல்லின் மேல் தோசை வெந்து கொண்டிருக்கும் பொது இன்னொரு ஃபுல்-பாயில் சொல்லு என்று கேட்கும் உன் துணையின் இன்மையை இங்கு கோர்டிதாஸ் சாப்பிடும் போதும் உணர்கிறேன்.

இந்த ஊர் நல்லா பழகிடுச்சு ஆனா பழகாத நம் பிறிவு தான் நெருடலா இருக்கு. எதையுமே நல்லா பழகிக்கணும் ன்னு நினைப்பேன் ஆனா இந்த தனிமைய பழகிக்க கூடாதுன்னு பயப்படுறேன்.

எதை செய்தாலும் உன் நினைவுகள், ஹம் நினைவுகள் – அதுக்கு எல்லை தான் இருக்கா இல்ல எக்ஸ்பைரி டேட் தான் இருக்கா?

மணல் பரப்பில் மிளகாய் பஜ்ஜியுடன் அலைகளின் பேர் இரைச்சல் உன்னோடு மன அமைதியா இருப்பேன். இப்போ வீடே அமைதியா இருக்கு மனசு மட்டும் பேர் இரைச்சல் பொடுது.

உனக்கு புடிச்ச இட்லியும் ஆட்டு கொழம்பும் செய்து தர குண்டானுக்குள் இருக்கும் இட்லி போல பொங்கி கொண்டிருக்கிறேன்.

***தொடரும்***

2 thoughts on “மனைவிக்கு கடிதங்கள் 2

  1. Gathagathappu thedum antha nodigal, unarvugal… eppozhuthum urangaa sparisa thedalin kaadhal, kattikondu urangum kaamam konjam kaadhal migum aravanaippugal

Leave a Reply to Mahesh R Abishek Cancel reply

Your email address will not be published. Required fields are marked *