அம்மாவின் காதல் – 1

அத்தியாயம் 1:

தையல் மெஷின் ல கால் வலிக்க வேலை செஞ்சி, பல வீட்ல கை வலிக்க பத்து பாத்திரம் தேச்சி, மண்ட வலிக்க கல் தூக்கி சித்தாளா கூலி வேலை செஞ்சி தனக்கு கால் வயிறு நெறஞ்சா போதும் தன் புள்ளைங்க பசின்னு யார் முன்னாடியும் நிக்க கூடாதுன்னு நெனைகுற கணவனால் கை விடப்பட்ட இல்ல இல்ல கையால் ஆகாதவன் விட்டுட்டு போனாலும் தன் பிள்ளைங்கல தானே வளத்து காட்டுவேன்னு தலை நிமுந்து நிக்குற தாய்க்குளங்கள் வாழ்ந்த அதே காலத்துல தான் இருவத்தஞ்சு வயசுல கண்மணி ஓட கணவன் அவள விட்டுட்டு போனான், அஞ்சு வயசு அனிதா கைல.

எதுக்கு கல்யாணம் ? ஏன் கல்யாணம்? நெருப்பு முன்னாடி உக்காந்து புரியாத மொழியில கடைசி வரைக்கும் கூட இருப்பேன் சத்தியம் பண்ணதாலயா ? இல்ல புரியுற மொழியில சொல்லி இருந்தா, கூட இருந்திருப்பானா? ஒரு பொண்ண முழுசா பாக்க தான் இந்த கல்யாணமா ? அதுக்காகவா இவ்ளோ ஆர்ப்பாட்டம். இல்ல அவள சோதிச்சி பாக்க இந்த கல்யாணமா ? இப்படியெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருந்தா கண்மணி.

இந்த மாதிரி ஆளுங்களுக்கு வக்காலத்து வாங்க சில பேர் வருவானுங்க, பொண்டாட்டி தொல்ல தாங்காம ஓடி போயிட்டான், இவ என்ன பண்ணாளோ அவன் போயிட்டான். இப்படியெல்லாம் நாக்கு மேல் பல்ல போட்டு பேசுறது  மட்டுமில்லாம  மூலைய கழட்டி ஓரமா வெச்சிட்டு பேசி, மொத்த பழியையும் பொண்ணுங்க மேல தினிக்கறது மட்டும் இல்லாம குழந்தைய பாத்துக்குற பொறுப்பையும் பொண்ணுங்க கிட்டயே தள்ளி விட்டுடுவானுங்க.  ஆனா அந்த ஆம்பளைங்க மட்டும் ஜாலியா ஊர் மேய போயிடுவாங்க இவங்களும்‌‌ கண்டுக்க மாட்டாங்க.

தனிமை தனிமை எப்போவும் தனிமை. இருட்டு அறையில் சத்தமே இல்லாத இடத்தில மண்டய ஏதோ செய்யும்ல , அதே மாதிரி வாழ்க்கை பூரா இருக்கணும் னா!

இப்போ மாதிரி அப்போ இல்ல. ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெக்கமாட்டாங்க, அவங்களா போயி யார்கிட்டேயும் சும்மா சிரிச்சி பேசுனா கூட வேசி பட்டம் கட்டுவாங்க. கனவுல கூட ஆம்பளைய நினைக்க கூடாது. கடைசி வரைக்கும் குடும்ப மானத்த வீட்டு பொண்ணோட ஓடம்பு மேலயே வெச்சி இருப்பானுங்க!

ஒரு பெரிய பாலை நிலத்துல நீங்க மட்டும் தனியா வாழ்ந்துக்கோங்க அப்படின்னு சொன்னா உங்களால வாழ முடியுமா? அட பாலை என்ன ஐந்தினைல ஒன்னுதுலயாவது வாழ முடியுமா ? பொண்ணுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை ? பொண்ணுங்களுக்கு உடல் தேவை இல்லையா ? இல்ல மன தேவை தான் இல்லையா ? உலகத்துல ஆம்பளைங்களுக்கான தேவை பத்தி மட்டும் நினைக்க கூடிய காலத்துல இருந்த கண்மணி இப்படி புழுங்கி புழுங்கியே பதினஞ்சு வருஷம் கழிஞ்சிடுச்சி. கண்மணிக்கு படிப்பு துணை இருந்ததால ஓர் அளவுக்கு வசதியாவே வாழ்ந்தா ஆன அந்த பதினஞ்சு வருஷம் மன வேதனை இருக்கே! அப்பப்பா அனுபவித்தா மட்டுமே புரியும்.

இந்த பதினஞ்சு வருஷ பயணத்துல கண்மனிக்கு ஆம்பளைங்கள விட பொம்பளைங்க தொல்ல தான் அதிகம். இவளுங்களுக்கு அமஞ்சிடுச்சினு போடுவாளுங்க பாருங்க ஆட்டம். கண்மணி மேல வீண் பழி போடுறது , அவங்க வீட்டு ஆம்பளைங்கல கண்மணி மயக்கிடுற மாதிரி சந்தேகப்படுறது, இல்ல ரெண்டு நாள் பேசுனா மூணாவது நாள் உதவிக்கு வந்துடுவாளோனு ஒதுக்குறது இப்படி ஏராளம்.

காலைல அறக்க பறக்க வேலைக்கு போறப்போ தான் அந்த ஃபோன் கால் வந்தது. கண்மணி ஓட கணவன் வீட்ல இருந்து. ” கணபதி நம்ம ல விட்டு போயிட்டான் !” ஒரு அழு குரல்.

கண்மணி முகத்துல ஒரு சின்ன சலனம் கூட இல்ல. வருத்தமும் இல்ல சந்தோஷமும் இல்ல , யாரோ மூணாவது தெருவுல முக தெரியாத நபர் இரங்கல் செய்தி கேட்டா வரக்கூடிய வருத்தம் கூட கண்மணிக்கு வரல.

***தொடரும்***

2 thoughts on “அம்மாவின் காதல் – 1

Leave a Reply to Sabari Savithiri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *