முதலிரவு

Don’t judge story with title 🙂

சில வருடங்கள் காதலித்த பின் திருமணம் செய்துகொண்டவர்கள் ஷர்மிளாவும் ரோஹனும் . ரோஹன், நவயுக மனிதன், பெரும் புரட்சி தனிமனிதனிடம் தான் ஆரம்பமாகிறது  என்று நம்புகிறவன். வழக்கமான மாப்பிள்ளைகளுக்கு உண்டான முதலிரவு ஆர்வம் ரோஹனுக்கு இல்லையென்று சொன்னாலோ அது நம்பமுடியாத  பொய்யல்லவா.

ஷர்மிளாவை அவளின் அத்தை முதலிரவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார், பெண்ணும் பெண்ணும் பேசும் போது அந்தரங்கம் அது அந்தரங்கமற்று போகிறது. அத்தை சேலையை நன்றாக  இழுத்து பின்பக்கம் வடிவாய் தெரியுமாறு முந்தாணையை மார்மேல் இட்டாள் .

“என்னடி ஜாக்கெட்டை நிரப்பாத மார்பும் ஒரு மார்பா” என்று அத்தை கேலி செய்தாள்.
“எல்லாம் கொஞ்ச காலம் தான் அத்த, அப்புறம் மார்பு கணம் தாங்காமல் ஜாக்கெட் நூல் தளர்ந்துடும், ஆமா உங்களுக்கு தெரியாததா” என்று சிரித்தவாறு மறுமொழி சொன்னாள் .

இயல்பாகவே புதுப்பெண்ணுக்கு உண்டான ரத்தம் கன்னத்தில் ஏறிய  முகஜொலிப்பு ஷர்மிளாவுக்கு கொஞ்சம் குறைந்து இருந்தது. நேரமாக ஆக வாட்டம் அதிகமானது, அதை அத்தையும் கவனித்தாள்.
“எல்லா பெண்ணுக்கு இருக்க கவலை தான், ஆனா முதலிரவு அன்னைக்கு ஏதும் பண்ணாம இருக்கறது தான் இப்போ பேஷன், ஆம்பிளைங்க  பெண்களை புரிஞ்சிக்குறாங்கலாமா ” என்று அத்தை ஒரேபோடாக உண்மையை போட்டுடைத்தாள் சிரித்தவாறு.

ரோஹன் ஒரு பக்கம் காமம் கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்கேற அதை அவன் செயலிலும் சொல்லிலும்  காட்டிவிடக்கூடாதே என்று காலையில் இருந்து பட்ட போராட்டங்கள் கோமாளித்தனமாகவே முடிந்தது. சில சமயம் மாப்பிள்ளைகள் வாய்திறக்காமல் இருப்பது நல்லது. காதலிக்கும் பெண்ணை என்ன தான் காதலிக்கும் பொது, சில சமயம் மற்றவர்களுக்கு தெரியாமல் பல சமயம் அவளுக்கே தெரியாமல் என்று ஏமாந்து சிறு சிறு உரசல்களும் , தீண்டல்களும் செய்து இருந்தாலும் மனைவி ஆன பின் முதலிரவு அன்று கோவில் சிலைகளுக்கு ஒப்பாக இயற்கையாய் வெளிச்சம் ஏறிய முகம், ஜொலிக்கும் பட்டு புடவை, மணக்க மணக்க கழுத்திலிருந்து வரும் புதிதாய் பூசிய கிழங்கு மஞ்சளின் வாசனை, நெற்றிக்கு பழக்கமே இல்லாத அடர் சிவப்பு குங்குமம் திடீர் ஒட்டுண்ணியாய் முடிமேல் ஒட்டியிருக்க, கைகளிலும் கால்களிலும் கரும்சிவப்பு மருதாணி – கோபுரங்களில் இருக்கும் சிறிது சிறிதாக ஆனால் துல்லியமான வேலைப்பாடுகள் போல். எவ்வளவு காற்று வந்தாலும் வியர்க்கும் அவளின் மேல் உதடு என்று அந்த காட்சி காணத்தான் காதலன்கள் படும் பாடு!

ஒரு வேலை கொஞ்ச நேரம் பேசி புரிந்து அப்புறம் இயற்கையாகவே நடக்கட்டும் என்று எதாவது சொல்லிவிடுவாளோ  என்று குழம்பினான். அதெல்லாம் இரண்டு மாதம் முன்பு யாரென்று தெரியாதவர்களிடம் வாழ்க்கையை ஒப்படைப்பவர்கள் செய்வது, நமக்கு என்ன வருடங்கள் பல ஆச்சே. முள் அகற்றிய கன்னிவெடி போல் அவள் காலடி அறைக்குள் பட காத்திருந்தான், வெடிப்பதற்கு.

ஷர்மிளா அறைக்குள் வந்து பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் இருக்கலாம். அவள் எதுவும் சொல்லவில்லை, குழப்பம் நிறைந்த புன்னகை அவ்வப்போது வந்து சென்றது. மன்னனின் கையசைவுக்கு காத்திருக்கும் தளபதி போல காம குதிரை ஏறி துடிப்புடன் பார்த்திருந்தான்.

“ரோஹன்” ஒரு வழியாய் வாய்திறந்தாள் ஷர்மிளா.
“சொல்லு ஷர்மி”
“உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கும்?”
இது படுக்கைக்கான கேள்வி இல்லை என்று புரிந்தது ரோஹனுக்கு.
“நீ தைரியமான பொண்ணு”
“அப்புறம் “
“நெறய இருக்கே “
“பரவால்ல சொல்லு” என்று இழுத்தவாறு கேட்டாள்.
“உன்னோட தைரியம், ப்லாக்ல எழுதுற எழுத்து புடிக்கும் – படிக்குறவங்களுக்கு பளீர்னு கன்னத்துல அரைமாதிரி இருக்கும், நீ மூலிகை செடி வளக்குறது புடிக்கும், ஆபீஸ் ல உன்னோட ஆளுமை புடிக்கும். கூச்சமே இல்லாம சாப்புடுறது புடிக்கும், பாசத்தைக்கூட அதட்டலா காட்டும் அதிரடி புடிக்கும். இன்னும் நிறைய இருக்கு இப்போ சொல்லமுடியல” ரோஹன் முடிஞ்ச அளவுக்கு சொல்லிமுடிக்க.

“நீ, என்ன டிரஸ் இல்லாம நெனச்சி பாத்து இருப்பல” ஷர்மிளா கேட்ட பின் ரோஹானை பார்க்கவே இல்லை.

“அது….” கொஞ்சம் தயக்கத்தோடு இழுத்தான் ரோஹன்.

“பரவால்ல சொல்லு டா ” ஷர்மிளா மீண்டும் கேட்டாள்  கொஞ்சம் புன்னகையோடு.

“ஆமா, அதான் இப்போ நெஜத்துலயே பாக்கப்போறனே” என்று வழிந்தான்.

கொஞ்சமாய் சிரித்தால் ஷர்மிளா. “உனக்கு என் ஒடம்ப… காமிக்க போறது இல்ல” ஷர்மிளா முகத்தில் ஒரு உணர்வும் இல்லாமல் சொன்னாள் .

தூக்கிவாரி போட்டது ரோஹனுக்கு என்று சொன்னால் அது பொய், அவனை தூக்கிலேயே போட்டது.

சுதாரித்து கொண்டு “இப்போ இதெல்லா சகஜம் தானே. உனக்கு எப்போ தோணுதோ பண்ணலாம்” ரோஹன் சொன்னான்.

“நோ நோ பேபி, இன்னைக்கு பண்றோம்” ஷர்மிளா சொன்னாள் சிரித்தவாறு.

“எனக்கு ஒன்னும் புரியல” ரோஹன் குழம்பினான்.

“எனக்கு பண்ணனும் தான் ஆசை ஆனா…”

“ஆனா என்ன ஆனா , சொல்லு ஷர்மி” ரோஹன் கொஞ்சமா கொதிக்க ஆரம்பிச்சான்.

“என்ன நீ முழுசா பார்த்தப்பறம்  உனக்கு நா தைரியமானவளாவோ , ப்லாக்ல எழுதுறவாளோ, மூலிகை செடி வளப்பவளோ, டீம் லீடோ, கூச்சமே இல்லாம சாப்புடுற ஃபுடீயோ கிடையாது எப்பையும் என்  ஒடம்பு தான் உனக்கு தெரியும்.” ஷர்மிளா அவளுடைய வாட்டத்தின் காரணத்தை சொல்லி முடித்தாள்.

“ஹே , அப்படியெல்லாம் இல்லடி” ரோஹன் துள்ளி எழுந்தான்.

“இரு இரு, ஆண்களை நம்பமுடியாது, அவங்க சுயரூபத்தை முழுசா பார்த்தப்பறம் காமிப்பாங்க, அதுவரைக்கும் நல்லவன் வேஷம் தான் ” துள்ளியவனை அடக்கினாள் ஷர்மிளா

“எல்லா ஆண்களும் ஒன்னு கிடையாது” ரோஹன் ஆண்களின் வழக்கமான பதிலை சொன்னான்.

“நோட் ஆல் மென் ஹாஷ்டாக் ஆ; பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது” .
“இந்த வரிகள் உனக்கு தெரியாதா? இதை எழுதுனவரே இந்த வரிகளுக்கு விதிவிலக்கு கிடையாது.” ஷர்மிளா சொல்லி தனது நிலையில் இருந்து இறங்க போவதில்லை என்ற முடிவில் இருந்தாள்.

“நீயென மீ டூ ஹாஷ்டாக் ஆ; இதுல என்ன இருக்கு எனக்கு புடிச்சத கேக்ககூடாதா” ரோஹன் கேட்டான்.

“கேக்கலாம், தப்பே இல்ல. நீ கேக்குறன்னு நானும் விட்டுக்குடுக்கலாம். அதுக்கப்பறம். இதோட முடியாது, நாளைக்கு உனக்கு வேற ஏதாவது தோணும் அதையும் மனக்குறையோட செய்றேன் அப்பறம் வேற ஒன்னு , இப்படியே போய்கிட்டே இருக்கும். ” ஷர்மிளா பதிலளித்து  தொடர்ந்தாள்.

“சரி என்ன முழுசா பாக்குறது தான் உன்னோட அல்ட்டிமேட் ஆசை னு வெச்சிக்கோ. ஒரு மிக பெரிய காட்டுல மிக பெரிய மிருகத்தை வேட்டையாடுறது தான நல்ல வேட்டைக்காரனோட ஆகா சிறந்த ஆசையா இருக்கும்?” ஷர்மிளா கேட்டாள்.

“ஆமா”

“அப்படியாப்பட்ட மிருகத்தை வேட்டையாடிட்டானா அதுக்கப்பறம் மிஞ்சுறது வேட்டைக்காரனுக்கு வெற்றி கிடையாது” ஷர்மிளா சொல்ல ரோஹன் குறுக்கிட்டான்.

“அது எப்படி” ரோஹன் கேட்டான்

“இதுக்கு தான் ஜெயமோகனை படிக்கணும், அதுக்கப்பறம் வேட்டைக்காரன் என்ன பண்ணப்போறான் எதுவுமே இல்ல , அவனுக்கு மிஞ்சுறது வறுமை தான்.   உன்னோட அல்ட்டிமேட் ஆசை நிறைவேறிடுச்சுனா அப்பறம் என்ன? ஒன்னும் இல்லை” ஷர்மிளா சொல்லி முடித்தாள்.

“உனக்கு என்ன, சம்பவம் பண்ணனும் ஆனா நீ காட்டமாட்ட” ரோஹன் முறைத்தவாறு சொன்னான்

விளக்கை அணைத்தான் ரோஹன், புது வெளிச்சம் பிறந்தது.

“உன்ன இப்படி எல்லாம் யாரு யோசிக்க சொல்றா” ரோஹன் கேட்டான்

“எல்லாம் என்னோட மூள ண்ணே” ஷர்மிளா சிரித்தாள்.


********************முற்றும் ****************

எழுத்து – சபரி

2 thoughts on “முதலிரவு

Leave a Reply to Hemalatha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *