பைத்தியக்காரி

Don’t judge story with title 🙂

எனது அன்றாட பிழைப்பு இந்த கடற்கரைல ஆரம்பிச்சி இதே கடற்கரைல தான் முடியும். நா சுமார் அஞ்சு வருஷமா பிச்சை எடுக்குறேன் இந்த கடல் அதுக்கு பக்கமா இருக்குற நகரம் தான் என்னோட உலகம் . மண்ணாலும், மணற்காற்றாலும், மாச சுமந்துக்கிட்டு வர நகரத்து சாலை காற்றாலும் கருப்பு நிறம் ஏறிய எனது மார்பகத்தை ஒருவரோ இருவரோ பார்ப்பாங்க;  

என்னதான் நா அரை நிர்வாணமா திரிஞ்சாலும் யாரும் என்னை இச்சையோடு பாக்கிறதில. என் கருநிற உடம்புல கடல் காற்றால அங்கங்க வெள்ளை நிற பூக்கள் பூத்திருக்கும். எனக்கு ஒரு பதினெழு பதினெட்டு வயசு இருக்கும் அதனால வயசான பிச்சைகாரங்க அளவுக்கு என் மேல் இரக்கம் வராது. எனக்கு கிடைக்கும் பிச்சையும் கம்மி, என் மேல் இருக்கும் இச்சையும் கம்மி.

            எனக்கு வெயில் அடிக்கும் வேளையில மேகமூட்டம் வந்ததும் திடீர்ன்னு வர குளிரு ரொம்ப இஷ்டம். என்னமோ என் உடையற்ற மார்பகத்து மேல அடிக்குற குளிர் காற்றும், வெளிச்சம் ரொம்ப வெளிச்சம இல்லாம கொஞம் கொரஞ்சு இருக்கும் சூழல் எனக்கு இஷ்டம். கடற்கரை தாண்டி ஜோடிகள் நிறைய உலவுற பக்கம் என்னோடு பிச்சையெடுக்குற பாட்டி மேல மூடிக்க துணி குடுத்தாங்க அது என்னமோ அன்றைக்கு எப்போவும் வர சராசரி சில்லறை கூட வரல அதனாலேயே மேல துணி போடுறது இல்லைனு முடிவேடுத்தேன். உடை போட்டா இரக்கம் குறைஞ்சிடுது. இரவு நேரங்கள்ல பருவ பெண்ணுக்கான எண்ணங்கள் வரும். ஊருக்கு பைத்தியக்காரியாவும் பிச்சைக்காரியாவும் இருந்தா கூட அவ்வப்போது வந்து போகுற குடிகாரர்கள் என்னை ரசிப்பாங்க. ஒரு நாள் எனக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு ஒரு குடிகாரர் கூப்பிட்டதும்போனேன்.அவர் பிச்சை போட கூப்பிடலன்னு தெரிஞ்சி தான் போனேன்.

            என்ன தான் வெள்ளை மாளிகை மேல மாசும், தூசும் பட்டு நிறம் மாறி கருஞ்சாயல் அது மேல இருந்தாலும் அதையும் ரசிக்கிற மக்கள் இருக்கத்தானே செய்யுறாங்க. கைவிடப்பட்ட வெள்ளை மாளிகை போல என்னை ஒருத்தர் ரசிக்கறது பிடிச்சியிருந்தது. அவர் என்னை பின்புறத்தில் இருந்து அணச்சப்போ என்னமோ புரியாத உணர்வு வந்தது. என்னோட மார்பகத்தை பிடிச்சி அதோட விளையாடி கொண்டு “பைத்தியக்காரிய இருந்தாலும் உன் முலையிருக்கே” என்று ஆச்சரியமா சொன்னார். மார்பகத்துக்கு இன்னோரு பேரு முலைன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. அவர் வேற எதுவும் செய்யல இருந்தாலும் ஒரு நூறு ரூபாய் குடுத்தாறு. இது என்ன? சந்தோசத்த குடுத்து காசும் குடுக்குறான் மகராசன்னு நினைச்சு சிரிச்சேன். இந்தா இன்னோரு அம்பதுன்னு நோட்ட நீட்டினார். வழக்கமா நான் பிச்சையெடுகுறப்போ பைத்தியக்காரின்னு நிரூபிக்க சிரிக்கறதுண்டு அப்போஅதிகமா சிரிச்சா அதிகமா காசு போடுவாங்க அப்படி நினைச்சிட்டார் போல. பைத்தியக்காரில!

இப்படியே வழக்கமா போயிகிட்டுருந்தது. ஒரு நாள் நல்ல வெயில் வேளை நிழல் குடுக்க பல பேர் பாட்டிக்கு வருவாங்க ஆனா என்ன போல ஒரு நிர்வாண பெண்ணுக்கு… இல்ல இல்ல பைத்தியக்காரிக்கு யார் வருவா. பல காதல் ஜோடிகள்ல என்ன அவங்க ஜோடி பார்த்துட கூடாதேன்னு கவலபடுற பொண்ணுங்க தான் அதிகம் எனக்கு உதவலாம்ன்னு நினைக்குறவங்க ரொம்ப கம்மி அதுலயும் இன்னைக்கு சுத்தம். நானா தேடி ஒரு மரத்தோட அடியில உக்காந்திருந்தே. அப்போ என்னை நோக்கி ஒரு வயசு பையன் நடந்து வந்தார். என்ன இவருக்கு இவ்ளோ தைரியமான்னு நினைச்சேன், வழக்கமா என்ன பாத்தா ஆண்கள் தலய தொங்கபோட்டுக்குவாங்க. அந்த பையன் கூட ரெண்டு அம்மாங்க வந்தாங்க, ”உனக்கு சாப்பாடு தினமும் தரோம் வரியான்னு கேட்டாங்க “. இந்த சாலையில என்னோட பிச்சையெடுக்குற பாட்டி யாராவது சாப்பாடு தரேன்னு கூப்பிட்ட போகக்குடாதுன்னு சொல்லியிருக்காங்க என்ன வித்துடுவாங்களாம். சரி வித்துக்கட்டும்ன்னு தைரியமா கிளம்பினேன் ஆனா அவங்க நிஜமாவே சாப்பாட வெச்சாங்க, என்னை குளிக்க வைக்கலாம்னு சாப்புடறப்போ சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல என்னை குளிப்பாட்ட தயார் ஆனாங்க. அந்த பையன் கொஞ்சம் கூட கூச்சப்படாம என்ன குளிப்பாட்ட ஆரம்பிச்ச. எனக்கு என்னமோ போல இருந்தது. வயசு பொண்ணில்லையா அதான் கூச்சம். கொஞ்ச நேரத்துல வெள்ளை மாளிகை கொஞ்சம் கொஞ்சமா சுத்தமாச்சு அந்த பையன் இப்போ லேசா தயங்குனான். அவனால இதுக்கு மேல நல்ல எண்ணத்தோட தொடர முடியாதுன்னு தோனுச்சு போல அதனால அந்த ரெண்டு அம்மாங்கள்ல ஒருத்தர்க்கிட்ட தொடர சொன்னான். என்ன போல நிறைய பேர் இங்க இருந்தாங்க ஆனா எல்லாரும் கொஞ்சம் வயசானவங்க.

            ஒன்னோ ரெண்டோ வாரம் இருக்கும் இங்க வந்து, அந்த வயசு பையன் நோட்டம் விடுறதும் என்னை பார்த்து சிரிக்கறதுமா இருந்தான், நானும் அவனை பார்த்து சிரிக்கறதும், சிணுங்கறதுமா இருந்தேன், மேலும் ஒரு மாசம் கழிஞ்சது. அவனை அவப்போது மனோன்னு கூப்பிடுற சத்தம் கேட்கும். ஒரு நாள் மனோவ கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டாங்க. இது என்ன பைத்தியகார கும்பல் பைத்தியத்த கல்யாணம்  பண்ணிக்குறியான்னு கேட்க்கிறாங்க என நினைச்சிக்கிட்டு வழக்கம் போல சிரிச்சி வெச்சேன்.

            நான் இப்போ இருக்க இடம் பேரு மகிழ்ச்சி இல்லம். இங்க நிறைய ஆண்கள் பெண்கள் வேலை பாக்குறாங்க என்ன தான் நான் உடை அணிஞ்சியிருந்தாலும் என்னோட மார்பகத்த நிறைய பேரு பாக்க ஆரம்பிச்சாங்க. எந்த ஆண் என்னைப்பார்த்தாலும் முதல அங்க தான் பாப்பாங்க, ஏன் இந்த இல்லத்துக்கு உதவி செய்ய வர கல்லூரி மாணவர்கள் கூட என்னை அப்படித்தான் பார்த்தாங்க. எனக்கு புரியாதுன்னு நினைச்சிக்கிட்டு “என்ன முலை பாருடான்னு!” ஆச்சரியமா சொல்லுவாங்க அப்போயெல்லாம் எனக்கு அந்த குடிகாரர் நியாபகம் வரும் கூடவே ஒரு வித சிரிப்பும் வரும்.             இது ஒரு பக்கம் இருக்க கல்யாணம் செய்றதா சொன்னானே இவனை கொஞ்சம் சில்மிஷம் செய்வோம்ன்னு பார்த்த அவன் கட்டியணைக்கவே சங்கோஜப்படுறான், இன்னும் அவனுக்கு நான் பிச்சைக்காரி, பைத்தியக்காரிங்கற நினைப்பு போகலங்கறது பளிச்சுன்னு அவன் மூஞ்சில தெரிஞ்சது. இப்படி என்னை இன்னும் பிச்சைக்காரியா பாக்குற காதலன், அல்ப்ப தனமா என் மார்பகத்த பாக்குற ஆண்களை புடிக்கல. பிச்சைக்காரி மார்பகத்தை பாத்தா ஊர் காரி துப்பும்ன்னு பயம் இருக்கே அது புடிச்சது, பிச்சைக்காரி மார்பகத்தை மொரச்சிப்பாக்க விடாத சமூகம் புடிச்சது, என்னைக்கோ ஒரு நாள் வந்தாலும் அந்த குடிபோதைலயும், பிச்சக்காரின்னு தெரிஞ்சும் அல்ப்பதனம் இல்லாம என்ன உத்து பார்த்து,என்ன தொட்ட அவர புடிச்சிருக்கு. நேத்து சரியா தூக்கம் வரல, மகிழ்ச்சி இல்லத்த விட்டு இந்த கடற்கரைக்கே வந்துட்டேன். இன்னைக்கு என் உடுப்ப கலச்சிட்டு இதமான காத்த என் மார்புல உணரும் போது என்னை எவனும் தப்பா பாக்க பயப்படும் போதும் சுகந்திரமாயிருந்துச்சு. ஒரு வேளை இதுதான் சுகந்திரக்காற்றோ! 


********************முற்றும் ****************

எழுத்து – சபரி

6 thoughts on “பைத்தியக்காரி

  1. Good one. I didn’t expect the way it is going and it has the hidden truth.
    Keep posting.

    All the best.

  2. அருமை… வாழ்த்துக்கள் நண்பா., தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply to Maya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *