பனிக்கால நாய்கள்

எழுத்து : சபரி அனிதா, தன் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கண்மணி உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். என்ன பாக்குற என்றார் போல் புருவங்களை மேலும் கீழும் அசைத்து காட்டினாள். ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தாள் ஆனால் மனதளவில் எப்பொழுது இணைப்பை துண்டிப்பாள் என்றெண்ணினாள். இப்படியே பல நிமிடங்கள் கடந்தன, ஏழாவது முறை வைக்கிறேன் என்று சொல்லி நிஜமாகவே வைத்துவிட்டாள்.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 7

எழுத்து: அரன் சனிக்கிழமை. தோள்பை மாட்டிக்கொண்டு , நடுநெற்றி கரும் பொட்டையும் சரி செய்து கொண்டு கிளம்பினாள் பொன்னி. வழக்கம் போல் அர்ச்சனைகள் தான். அப்பாவுக்கு அன்போடு கட்டுப்பாடு. அம்மாவுக்கு குமட்டுகிறது. வேலன் குடியிருப்பு முதல் தெரு, தரை தொடும் பாதம் தாளமிடும் நேரம் முன்னவே தித்திப்பாய் ஓடி வரும் வாண்டுகள். அள்ளிக்கொஞ்சி அன்பு செலுத்துகிறாள் பொன்னி. 

Read More

உனக்கு எதிரி யார் ?

எழுத்து : சபரி ‘என்னடி இன்னும் வேலை பாத்துகிட்டு இருக்க ?’ கண்மணி கேட்டாள். ‘அம்மா, வர வர என்னோட டீம்-ல கடுப்பேத்துறாங்க’ அனிதா சொல்லிவிட்டு தொடர்ந்தாள் ‘எட்டு மணிக்கு முடிக்கணும்னு நினைச்சேன் இன்னும் முடியல’ சலிப்பாக பேசினாள்.

Read More

எங்களுக்கும் காலம் வரும்

எழுத்து : சபரி ஆறு முதல் ஒன்பது மாதம் பயிர் வளர்த்த  மஞ்சள் கிழங்குகள் பல டன் கணக்கில் இருக்கும், அதை பல பகுதிகளாக பிரித்து பெரிய இரும்பு பீப்பாயில் வேறுகளுடன் இருக்கும் மஞ்சள் கிழங்குகள் நிரப்படும், பெரிய பள்ளம் தோண்டப்படும், பீப்பாயை அதனுள் வைத்து சுற்றி தீ மூட்டப்படும் சுமார் ஒரு மணி நேரம் வேகவைக்கப்படும், அதன் பின் அந்த பீப்பாய் நிறைய இருக்கும் மஞ்சள் கிழங்குகள் பூமியில் கொட்டி காயவைக்கப்படும், இரவு முழுக்க இது…

Read More

மண்டைக்காய்தலும் சிறு சந்தோஷங்களும்

எழுத்து: சபரி சீதா , மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சதா அணிக்குள் நடக்கும் கூட்டங்களும், அரைவேக்காடு அலுவலக அரசியலும், அதை சமாளிக்கும் யோசனைகளுமாக நாட்களை கடத்தும் ஒரு பெண். தொடர் வேலைக்கு மத்தியில் அவ்வப்போது மாமியார் குடைச்சல் வேறு.

Read More

களத்துமேடு – அத்தியாயம் 6

எழுத்து: அரன் ஊரே பூக்கோலம் சூட, ரத வீதி எங்கும் மத்தளம் ஆட, பொண்டு பொடிசுகள் எல்லாம் ஆரவாரத்தில் ஆடி மகிழ, பக்தர்கள் வடமிழுத்து அழகாய் அசைந்து வந்தாள் உலகம்மன். ரத வீதி, ரதம் போகும் வீதி. வருசத்துக்கு ஒருக்கா வென்று கொண்டாடப்படும் ஊர்த் திருவிழா. தேர்ப் போகும் வழி நெடுக சனம் கண்பறிக்கும் விளையாட்டு சாமான் முதல், நாக்கு சுவைக்க நல்ல முறுகல் தோசை சாம்பார் வரை எல்லாம் நலம் தான். 

Read More