ஹிக்கிகோமோரி
ஹிக்கிகோமோரி என்னோட வாழ்க்கைல மொத்தம் பேசுனதே நாலு பேறு கூட தான். சாகுற தருவாயில் கூட என் கூட யாரும் இருக்க வேண்டாம். நா இந்த வீட்டை விட்டு வெளிய சென்றதே பத்து முறையை தாண்டாது. என்னோட மிக பெரிய துணையே தனிமை தான். என்னோட அறை எனக்கு தர மன நிம்மதியும் சௌகரியமும் வேறு எங்கும் கிடைக்காது. அறையில் பல நாளிதழ் துணுக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தது.