மனைவிக்கு கடிதங்கள் – 4

மனைவிக்கு கடிதங்கள் 4 பாரதி போல பார்ப்பவையெல்லம் கவிதை ஆக்க முடியவில்லை எனக்கு. உவமைகள் எழுதி காதல் சொன்னது ஒரு காலம், சொல்வதற்கு உவமையே இல்லையென்று காதல் சொன்னதும் ஒரு காலம். எதார்த்தமாக சொல்வது இந்த காலம். எதார்த்தம்? பரவசம் இல்ல பக்தியும் காதலும் உண்டோ? கன்னத்தில் முத்தமிடும் பொது சிலிர்க்கும் காது மடலும் கூச்சம் ஏறும் தாடை முடிகளும் பற்றி எப்படி கவிதை எழுதாமல் இருக்க முடியும். எப்படி சொன்னால் என்ன சொல்கிறோமா என்பது தானே…

Read More

மனைவிக்கு கடிதங்கள் – 3

பதில் கடிதங்கள் படித்து அந்த கடிதங்களின் உடே வாழ துடங்கிவிட்டேன். உன் குரல் செவிகளில் ரீங்கரித்து கொண்டே இருந்தது. இந்த நொடி படிக்கும் பொழுது கூட. கர்ப்பணைக்கு தான் என்ன சக்தி நினைத்ததும் உன்னை மனதில் உருவபடுத்திவிடுகிறது.

Read More

மனைவிக்கு கடிதங்கள் 2

கடிதம் 2 இங்கே குளிர் அதிகமாகிடுச்சு, அதீத குளிரில் அடர்த்தியான போர்வைக்குள் உன் கதகதப்பை தேடுகிறேன். தேடி தேடியே உறங்குகிறேன், காலையிலும் அந்த கதகதப்பு இல்லயே என்று ஏமாற்றம் அடைகிறேன். ‘ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் ‘ வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். சில காதல் வரிகளுக்குள்  வாழ்க்கை அடங்கிவிடுகிறது.

Read More

மனைவிக்கு கடிதங்கள் – 1

கடிதம் 1 வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி தனிமை நாசிகளின் வழியே சென்று வயிற்றில் உணர முடிகிறதே! தனிமையாக இருப்பவரின் அறையின் வாசம் அது. படித்து முடித்த உடன் குடும்ப சுமைக்காக பட்டிணத்திற்கு சென்று வாங்கும் கொஞ்ச நெஞ்ச சம்பளத்தில் கிடைக்கும் இடத்தில் தங்கும் ஒவ்வொருவரின் தனிமையை உணர்கிறேன்.

Read More