
பொங்கல்
எழுத்து : சபரி “கார்த்தி , டேய் கார்த்தி” உரத்தக்குரலில் நிஷா எழுப்பினாள். “ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க விடமாட்டியா” கார்த்தி கடிந்து கொண்டே எழுந்தான். ஒரு வாய் தேநீர் குடித்து விடலாம் என்று எண்ணி தேநீர் கேட்க வாய் திறக்கும்முன் நிஷா “சீக்கரம் போயி நெய் வாங்கிட்டு வா, பொங்கல் அடுப்புல இருக்கு”.