வெளிச்ச பூ

‘ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வீடு சார் இது’ என்று வீட்டு தரகர் வியனிடம் சொன்னார். வியனும் முதிராவும் அவ்வளோ பழைய வீடா என்று யோசிக்காமல், ஏதோ எதிர்பார்த்தது கிடைத்தது போல புன்னகைத்துக் கொண்டனர். ஆறு போர்சன்களாக பிரிக்கப்பட்டிருந்தது அந்த பங்களா. தரைத் தளத்தில் மூன்று வீடுகள் மற்றும் மேல் தளத்தில் மூன்று வீடுகள். ஒன்றாம் எண் கொண்ட வீட்டை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். மீதி வீடுகளில் ஆட்கள் சீக்கிரம் வந்துவிடுவார்கள் என்று வீட்டுத் தரகர் சொன்னார். வீட்டை சுற்றி…

Read More

கதவு

ஆசிரியரும் கவிஞரும் ஆன தமோஸ், தனக்கான ஒரு வீடு வேண்டும் என்று ஐம்பது வயதில் தான் தோன்றியது. தமோசின் ஜென் வாழ்வியலையும் கவிதைகளையும் அவரது மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமோஸ் தனியாகவே வாழ்ந்துவிட்டதால் தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று தோன்றாமல் நாடோடியாகவே சில வருடங்களுக்கு ஒரு ஊர் என ஊர் ஊராக திரிந்து வாடகை வீட்டிலேயே இருந்துவிட்டார். லேசான பச்சை படிந்த பாறைகளுக்கு மத்தியில் மெல்லிய சூரிய கதிர் பாய்ந்த ஓடையில் குதித்த தமோஸ்க்கு அந்த…

Read More

ஹிக்கிகோமோரி

ஹிக்கிகோமோரி என்னோட வாழ்க்கைல மொத்தம் பேசுனதே நாலு பேறு கூட தான். சாகுற தருவாயில் கூட என் கூட யாரும் இருக்க வேண்டாம். நா இந்த வீட்டை விட்டு வெளிய சென்றதே பத்து முறையை தாண்டாது. என்னோட மிக பெரிய துணையே தனிமை தான். என்னோட அறை எனக்கு தர மன நிம்மதியும் சௌகரியமும் வேறு எங்கும் கிடைக்காது. அறையில் பல நாளிதழ் துணுக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தது.

Read More

இரவின் குரூரம்

அந்த நாள் எப்படியோ ? இரவு என்ன உணவோ? எதுவும் தூங்க போகும் போது நினைவுக்கு வருவதே இல்லை ஆனால் ஏனோ மனதில் இனம் புரியா பயம் மட்டும் வருகிறது. ஒளி இல்லாததனாலா இல்லை ஒலி இல்லாததாலா ? மின் விசிறி இறக்கை சத்தம் மட்டும் இல்லையெனில் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிறதே. ஒயிட் நாய்ஸ் என்கிறார்கள், மின் விசிறி சத்தம் இதர அச்சம் தரும் சத்தங்களை தவிர்க்கிறதாம்.

Read More

வானம் வசப்படும்

சிறு வயதில் வானத்தை பார்த்தால் எண்ணக் கூட முடியாத அளவுக்கு புள்ளிகள் நிறைந்திருக்கும் ஆனால் இப்பொழுது ஒரு அறை மணி நேரத்தில் எண்ணிவிடலாம் போலும் என்று நினைத்து கொண்டே வெளியில் இருக்கும் வேப்ப மரத்தின் அடியில் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான் முருகன்.

Read More

ஸ்கின்

ஆதி மனிதர்கள் உடை களைந்து உடல் உறவு கொண்டனரா? உடைகள் அற்ற காலமதில்? நிர்வாணம் என்பது உடல் உறவில் தான் முடிய வேண்டுமா? ஏன் ஆடையின்மை மானத்தோடும், ஒருவரின் குணத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறது? பெண்களின் உடை மேல் என்ன தான் ஆர்வமோ, பெண்ணின் மீதான அத்துமீறல்களுக்கு அவர்களின் உடையை காரணம் சொல்வது ஏன்? உடையை கண்டறியாத மனிதர்களாக இருந்திருந்தால், எதை வைத்து அரசியல் செய்வார்கள்? எதை வைத்து பெண்ணின் குணத்தை அறிவார்கள் ? எதை வைத்து தவறுகளில்…

Read More

மாமியாரின் சமையல் அறை

எழுத்து: சபரி சாவித்திரி எப்பவுமே ஒரு டவுனுக்கு கொஞ்சம் தொலைவுல வேற ஒரு உலகம் வாழ்ந்துக்கிட்டு இருக்கும். நகர புழுதி காத்தை வெறுத்து, மரத்துக்கு அடியில் கைத்து கட்டில் போட்டு படுப்பதையே ரிடயர்மென்ட் பிளான் ஆக வைத்து இருக்கும் மக்கள். அப்படி ஒரு ஊரை நோக்கி செல்கிறான் பரி.

Read More