
தமிழ் சிறுகதைகள்


தாய் கிழவி
எழுத்து: சபரி குளத்தூர் பஸ் ஸ்டாப்ல இருந்து பஸ் கெளம்புற நேரமாச்சு, ஒரு வாலிப பையன் ஒரு பாட்டிய கூட்டிட்டு அரக்க பறக்க பஸ்ல ஏத்திவிட்டான். ‘பாட்டி… பஸ்ல ஏறிக்கோ நா வெளி வேலையா போறேன், மலைப்பட்டி பஸ் ஸ்டாப்க்கு வந்து உன்ன கூட்டிட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு பைக்கில் புறப்பட்டான்.

நச்சு மிகுந்த ஆண்மை
எழுத்து : சபரி திடீர் என திகைத்து எழுந்த கேசவன் மீண்டும் தூங்க முற்பட்டான். அருகிலிருந்த அவன் மனைவி ஜெயா ‘என்ன டா ஆச்சு’ ‘ஒன்னும் இல்ல’

பேப்பர் கப்
எழுத்து: சபரி டீ கடை ஒன்றில் இளவட்டம் ஒருவன் வடையை வாங்கி ரெண்டாக பிய்த்துக் கொண்டிருந்தான். பருப்பு வடை மொறு மொறுப்பு குறையாமல் இருந்தது. தூரத்தில் ஒரு மேள சத்தம் கேட்டது, அண்ணாந்து பார்த்தால் சிறு கூட்டம் ஒன்று வருவதாக தெரிந்தது.

வீடியோ கால்
எழுத்து : சபரி மார்கரெட் காதலிக்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. அவளோடு அலுவலகத்தில் பணி புரியும் மோஹித்தை தான் காதலிக்கிறாள். சில வருடங்களாகவே நண்பர்களாக இருந்தனர். சமீபமாக தான் ஏதோ ஒரு உணர்வு , நெருக்கம் அதிகமானதால் புரிதலும் அதிகமாகும் அல்லவா? நண்பர்கள் காதலர்கள் ஆவதில் தவறில்லை.

ஆன்டெனா
எழுத்து : சபரி ஆயிரத்தி தொண்ணூறுகளின் இறுதியில நூற்றாண்டு மாறது போல பல தொழில்நுட்ப வளர்ச்சிகளும் வந்துச்சு. ஒரு கிராமத்துல முதல் முறையாய் நடக்குற எல்லா விஷயத்துக்கும் மிக பெரிய ஒரு வரவேற்பும் ஆச்சர்யமும் இருக்கும். எங்க கிராமத்துல நாங்க சின்ன பிள்ளையா இருந்தப்போ ஒத்திசை (அனலாக்) ஆன்டெனால டிவி பாப்போம்.

ஹெல்மெட்
எழுத்து : சபரி ‘உங்களுக்கு விசா அப்ரூவ் ஆயிடுச்சா?’ மேனேஜர் கேட்டார். ‘ஆயிடுச்சி!’ விஷால் சொன்னான். ‘இன்னும் டூ ஆர் த்ரீ வீக்ஸ்ல ட்ராவல் பண்ண வேண்டியது இருக்கும்’ மேனேஜர் சொல்ல விஷால் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எத்தனை வருடங்கள் உழைப்பு. விஷால் வீட்டிற்கு அலைபேசியில் நல்ல விஷயத்தை சொன்னான்.

புரிந்தவர்களுக்கு மட்டும் – பகுதி 1
எழுத்து : சபரி பல வாரங்கள் கழித்து அமுதாவ பாக்கப் போனான் வடிவேலு. வடிவேலும் அமுதாவும் ரொம்ப நல்ல நண்பர்கள், சில நாட்கள் வேலை விஷயங்களால அடிக்கடி பாத்துக்க முடியல அதனால தினமும் மொபைல பேசிக்குவாங்க. என்னதான் மொபைல பேசினாலும் நேர்ல பாக்குற மாதிரி வருமா. பல நாள் கழித்து பார்த்தாலும் அந்த முதல் பார்வை பார்த்ததும் வர சிரிப்பு இருக்கே விலையில்லா மகிழ்ச்சி. நண்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு அனுபவம்.

புளிச்ச மாவு
எழுத்து : சபரி ‘தம்பி மாவு அரைச்சிட்டு வந்துடு’ அம்மா சொன்னாள். இருபத்தோராம் நூற்றாண்டில் பெண்களை சமையல் அறையில் இருந்து வெளியே கொண்டு வர கண்டறியப்பட்ட பல சாதனங்களில் கிரைண்டரும் ஒன்று. அதிலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

சுகுவுண்ட்டா
எழுத்து : சபரி மாலை முதுவெயில், மரங்களுக்கும், திருத்தணி மலை சுற்றி உள்ள குன்றுகளுக்கும் பின்னால் மறையும் நேரம். இளம்வயதினர் ஒரு புறம், பெண்கள் ஒரு புறம், சிறுவர்கள் ஒரு புறம் என சாணம் மொழுகிய அந்த மண் தரையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்தும் ஒருகலித்து படுத்தும் , சிரித்தவாறு உடலை அசைத்தும், நீண்ட நாள் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.