
களத்துமேடு : அத்தியாயம் 2
அத்தியாயம் 2 எழுத்து : அரன் வண்ணங்களின் வகைகளை விட சந்தர்ப்பங்களில் மனித மனங்களின் சிந்தனைகள் மிக அதிகம். சில ஆக்கும், பல அழிக்கும்.உள்ளப் புழுக்கத்தில் உருண்டு புரண்ட செங்காளைக்கு, உடலின் சோர்வு, சிந்தனைக்கு தெரியவில்லை. அடித்துப் போட்டவாறு இசக்கி ஒரு பக்கம் உறங்கிப்போயிருந்தான்.