சிறு வயதில் வானத்தை பார்த்தால் எண்ணக் கூட முடியாத அளவுக்கு புள்ளிகள் நிறைந்திருக்கும் ஆனால் இப்பொழுது ஒரு அறை மணி நேரத்தில் எண்ணிவிடலாம் போலும் என்று நினைத்து கொண்டே வெளியில் இருக்கும் வேப்ப மரத்தின் அடியில் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான் முருகன்.
முருகனின் மகன் நளன் தன் ஏர் பாட்ஸ்களை கழற்றிவிட்டு முருகன் அருகில் அமர்ந்தான். ‘ நளா சாப்டியா பா ‘ முருகன் கேட்டான்.
‘ ஆச்சு பா, நீங்க என்ன தூங்காம ஏதோ யோசனைல இருக்கீங்க ‘ நளன் கேட்டான்.
‘ இல்ல கண்ணு , சிறு வயசுல இருந்து வானத்தை பார்த்துக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா நட்சத்திரங்கள் கண்ணுக்கு தெரியல , அதான் யோசனையாக இருக்கு ‘ முருகன் சொன்னான்.
‘ நட்சத்திரம் தெரியுதே பா ‘ நளன் சொன்னான்.
‘ இல்ல இல்ல , எனக்கு இன்னும் கண்ணு கோளாறு ஆகல, வெவரத்தோட தான் சொல்றேன் ‘ முருகன் சொன்னான்.
‘ தெரியல பா , உங்க காலத்துல எடுத்த போட்டோ இருந்தா பாத்திருக்கலாம். இப்போ தான் ஜேம்ஸ் வெப் இருக்கே ‘ நளன் சொன்னான்.
தலையை திருப்பி நளனை பார்த்தார் போல தன் முகத்தை கையில் தாங்கி கோவிலில் உள்ள சிலை போல ஒருகளித்தான் முருகன். ‘ அட நான் கூட நியூஸ் ல பார்த்தேன் , என்ன கண்ணு அது ‘ முருகன் கேட்டான்.
அதற்குள் நளனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. ‘ ஒரு நிமிஷம் பா ‘ நளன் எழுந்தான்.
‘ என்னைக்கு ஒரு நிமிஷத்துல பேசி முடிச்சி இருக்கீங்க ‘ சொல்லி புன்னகைத்தார் முருகன்.
சமையல் அறையில் விளக்கை அணைத்துவிட்டு வள்ளி கருங் காப்பி கொண்டு வந்தாள். ‘ என்ன அப்பனும் புள்ளையும் அதிசயமா பேசிக்கிட்டு இருந்தீங்க ‘ வள்ளி கேட்டாள்.
‘ ஒரு வயசுக்கு அப்புறம் புள்ளைங்களா நெனச்சா தான் பெத்தவங்களே அவங்க கிட்ட பேச முடியும் ‘ முருகன் சொன்னான்.
‘ அது சரி பெத்தவங்களுக்கு என்ன தெரியும்னு நெனப்பு தான் கழுதைகளுக்கு ‘ வள்ளி தன் பங்கிர்க்கு கொஞ்சம் கொந்தலித்தாள்.
‘ அட நமக்கு தான் எல்லாம் தெரியும்னு நமக்கு தான் திமிரு , உண்மையிலேயே ஒரு தலைமுறைல இருந்து அடுத்த தலைமுறைக்கு எப்பொழுதும் அறிவு கூடிக்கிட்டே தான் போகும் ஆனா நாம தான் நமக்கு இருக்க அறிவ வெச்சி அவங்கள தடம் மாத்த பாப்போம் ‘ முருகன் சொன்னான்.
இதுவரை நளனின் முடிவுகளில் தலையிடாத கர்வத்தில் மற்றும் உரிமையில் சொன்னான் முருகன். ‘ வள்ளி , உனக்கு சின்ன வயசுல வானத்தை பார்த்த நினைவு இருக்கா ? ‘ முருகன் கேட்டான்.
‘ ஆமா இருக்குற வேலைல அதைப்பத்தி யோசிக்க நேரம் இல்ல , என்னோட உலகம் வேற, எவ்ளோ நாகரிகம், முற்போக்கு வாதம் பேசுறவங்களும் வீட்ல மனைவி தான் எல்லா வேலையும் செய்யனும்னு நினைக்கிறாங்க ‘ வள்ளி வருத்தத்துடன் சொன்னாள்.
‘ சரி சரி குத்திக்காட்டாத , கொஞ்சம் கொஞ்சமா மாறுவோம் ‘ முருகன் மழுப்பி சொன்னான்.
‘ அதுக்குள்ள நா இருக்க மாட்டேன் ‘ வள்ளி சொல்லிவிட்டு ஒரு முடக்கு காப்பியை விழுங்கினாள்.
‘ என்ன கண்ணு பேசி முடிச்சிட்டியா ? ‘ முருகன், ஃபோனை ஷார்ட்ஸ்க்குள் திணித்துக்கொண்டு வரும் நளனை பார்த்துக் கேட்டான்.
‘ ஹ்ம்ம் ‘ தோல்களை உதறினான் நளன்.
‘ சரி ஜேம்ஸ் வெப்-னு சொல்ல ஆரம்பிச்ச கண்ணு ‘ முருகன் கேட்டான். வேறு யோசனையில் இருந்த நளன் ‘ அத விடுங்க பா’ என்று கொஞ்சம் துடிப்புடன் சொல்லிவிட்டான்.
அடுத்த தலைமுறையிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைக்கும் முருகனுக்கு இது கொஞ்சம் சுருக்கென தைக்க தான் செய்தது. அப்பா முக வாட்டதை கவனித்த நளன் ‘ என்ன பா வானத்து மேல அப்படி ஒரு கிரேசிநஸ் ‘ என்று கேட்டான்.
‘ எனக்கு மட்டுமா இந்த கிரேசிநஸ் நம்ம முன்னோர்களுக்கு இல்லையா ? அவங்க கிட்ட இருந்து வந்தது தான் ‘ முருகன் சொன்னான்.
‘ என்ன சொல்றீங்க , சின்ன வயசுல ரோட்டோட முடிவுல தான் வானம் தொடங்குவதாக எண்ணி ஓடுவோம் , ஒரு போதும் வானம் தொடுர தூரத்துல வந்தது இல்ல ஆனா நாங்க ஒடுனத நிறுத்துனது இல்ல, இப்படியே கடலோட முடிவுல வானம் தொடங்கும்னு சில பேர் ஒடுவாங்க. அப்படி இப்படினு வானம் பூமில இல்ல ஆனா அகண்ட வெளியில் நம்ம உலகம் இருக்குன்னு அறிவியல் வந்ததால எங்களுக்கு அது தெரிஞ்சது, ஒரு சிறு பிள்ளையோட வியப்புலயே வாழ்ந்துட்டோம். ஆனா இந்த அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்துல நம்ம முன்னோர்கள் நாங்க எப்படி ரோட்டோட முடிவு நோக்கி ஓடுனோமோ அவங்களும் அந்த மாதிரி ஓடி அதோட விலைவாதான் பிரமிட்கள் , கோபுரங்கள்னு வானத்த நோக்கி போக ஆரம்பிச்சிட்டாங்கன்னு தோணுது ‘ முருகன் சொன்னான்.
‘அப்படி யோசிக்க முடியாது, அப்போ வானம் னா அது கடவுள்கள் வாழற இடம், நம்மளோட அறிவு எல்லாம் ஒரு கிரகம் ஒரு மனுஷனா மாறி வரம் தரும்’ புன்னகைத்தான். ‘இந்த பிரமிட்கள், கோபுரங்கள் எல்லாம் மதம் சார்ந்து தான் இருக்கு, அதன் அறிவியல் நோக்கம் இது தான் சொல்லமுடியாது, ஒரு வேலை வரலாறு பதித்து வைக்கவும் அவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லவும் இருக்கலாம்’ நளன் சொன்னான், மேலும் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு ‘இந்த பிரமிட்கள் , கோபுரங்கள் எல்லாம் திமிர் புடிச்ச ராஜாக்களின் வறட்டு பெருமிதத்துக்கும் தற்பெருமைக்கும் கட்டப்பட்ட மாதிரி தோணுது .இப்போ அறிவியல் வளந்தாச்சி எல்லாருக்கும் விண்வெளி பத்தி ஒரு அறிவு வந்துட்டதே ‘ நளன் சொன்னான்.
‘ அது சரி தான் , ஆனா வாழ்க்கைல ஒரு வியப்பும் இல்ல. இயற்கையை ரசிக்க முடியாத , இயற்கைல இருந்து நம்மளா நம்மள பிரிச்சிக்கிட்டோம், இயற்கையும் நாமும் வேறன்னு ஆயிடுச்சி. இவளோ செலவு பண்ணி வானத்துக்கு மெஷின் அனுப்பி பாக்குற ஜோருல கீழ இருந்து பாக்குற சந்தோஷத்தை இழந்துட்டோமோ ? ‘ ஒரு வித ஐயப்பாடுடன் முடித்தார் முருகன்.
‘ ஹ்ம்ம் என்ன சொல்றிங்க பா , இத்தன நூற்றாண்டுகளா நம்ம கடத்தி வந்த அறிவ கொறை சொல்ற மாதிரி இருக்கே’ நளன் சொன்னான்.
‘ அப்படி இல்ல கஷ்டப்பட்டு மேட்ச் பாக்க டிக்கெட் வாங்கிட்டு போயி , நேரா பாக்காம பெரிய திரைல பாக்குற மாதிரி ஒரு உணர்வு ‘ முருகன் சலித்து கொண்டு மல்லாக்க படுத்து வானத்தை பார்த்துக்கொண்டு பெரும் மூச்சு விட்டார்.
வள்ளி தன் கால்களில் தைலத்தை தடவி அக்கடா என படுத்தாள்.
நளன் தன் மொபைலில் ஜேம்ஸ் வெப் புகைப்படத்தை உற்று நோக்கினான்.

முற்றும்
முற்றும்