ஆதி மனிதர்கள் உடை களைந்து உடல் உறவு கொண்டனரா? உடைகள் அற்ற காலமதில்? நிர்வாணம் என்பது உடல் உறவில் தான் முடிய வேண்டுமா? ஏன் ஆடையின்மை மானத்தோடும், ஒருவரின் குணத்தோடும் தொடர்பு படுத்தப்படுகிறது? பெண்களின் உடை மேல் என்ன தான் ஆர்வமோ, பெண்ணின் மீதான அத்துமீறல்களுக்கு அவர்களின் உடையை காரணம் சொல்வது ஏன்? உடையை கண்டறியாத மனிதர்களாக இருந்திருந்தால், எதை வைத்து அரசியல் செய்வார்கள்? எதை வைத்து பெண்ணின் குணத்தை அறிவார்கள் ? எதை வைத்து தவறுகளில் இருந்து தப்பிப்பார்கள்? பெரும் முலைகள் கொண்ட சிலைகளின் மீதான இவர்களின் பார்வையென்ன?
மேலே உள்ள வரிகளை தன் கை ஏட்டில் எழுதி கொண்டே தேவி தன் மூன்றாம் பிறை நிலவு போன்ற தங்க டாலரை வாயில் கடித்து கொண்டு குப்புற படுத்திருந்தாள். கழுத்தின் மெல்லிய மயிர் பறந்தவாரு இருக்கும் படி செய்யும் மின் விசிறி இடது பக்கமாக தலையை திருப்பியது விசிரியின் குளிர் காற்றில் உடை அற்ற முதுகு சிலிர்த்தது, பின்பகுதியில் சிறிதளவு ரேஷஸ் இருந்தது, கால்களில் பின்புறம் தொடைகளின் இறுதியில் ரோமங்கள் அடர்த்தியாக தொடங்கி மேலும் அடர்த்தியாக கணுக்கால்களில் முடிந்தது, கொலுசின் முத்துகள் அந்த ரோமதில் மாட்டி இருந்தது.
“You don’t own me
I’m not just one of your many toys”
ரிங்டோன் அடித்தது, சத்தம் மேலெழும் முன் அந்த இணைப்பை எடுத்தாள் தேவி.
‘ ஹம்ம்ம் ‘
‘ என்ன பண்ற? ‘
‘ இப்போ தான் தூங்க வந்தேன், சும்மா ரேண்டம் தாட்ஸ் எழுதிக்கிட்டு இருக்கேன் ‘
‘ சரி சரி … சும்மா தான் ஃபோன் பண்ணேன் ‘
‘ உலகத்துல இந்த மாதிரி ராத்திரி நேரத்துல ஃபோன் பேசுற பாதி காதலர்கள் சும்மா தான் எதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க, உலகத்த பத்தி நமக்கு என்ன கவல’ தேவி சிரித்தாள்.
‘ அப்புறம் என்ன ?’ தேவி கேட்டாள்.
‘ இல்ல ‘ சற்று தயக்கம் காட்டினான்.
‘ என்ன பம்புற , சரி இல்லயே ‘ தேவி கேட்டாள்.
‘ அது… கொஞ்ச…கொஞ்சம் அடல்டரி யா பேசலாமா?’ அவன் கேட்டான்.
‘ ஓ! நீ அப்படி வரியா? சரி பேசு பாப்போம் ‘ தேவி சொன்னாள்.
‘ நீ என்ன டிரஸ் போட்டிருக்க ? ‘
‘ ஏன் மேட்சிங் மாஸ்க் வாங்கி தரப் போறியா? ‘ தேவி சொல்லி சிரித்தாள்.
‘ எப்பா உன்கிட்ட அத எதிர்பார்த்தேன் பாரு ‘ அவன் லேசாக கோபம் அடைந்தான்.
‘ அட என்னடா அடல்டரி ஆ பேசலாம் ன்னு சொல்லிட்டு சின்ன புள்ள மாதிரி கோச்சிக்குற ‘ தேவி பெரிய பரபரப்பு இல்லாமல் சொன்னாள்.
‘ தேவி…. இப்போ பேசலாமா வேண்டாமா?’ சலித்துக்கொண்டான்.
‘ சரி சரி டென்ஷன் ஆகாத , சொல்லு ‘
‘ என்ன போட்டிருக்க ‘
‘ எதுவும் போடல ‘
‘ நிஜமாவா சொல்ற , எதுவும் போடலிய? ‘
‘ என்ன டா? என்னோட பெட்ரூம் ல முழுசா போத்திக்கிட்டா இருக்க முடியும்? ‘ தேவி சொன்னாள்.
‘ அடுத்து உள்ள என்ன போட்டிருக்க அப்படி கேக்கலாம்னு பாத்தியா ? ‘ தேவி சொல்லி சிரித்தாள். அவனும் வாய் அடைத்துப்போய் இருந்தான். வழக்கமான டெம்ப்ளேட்குள் இந்த அடல்டரி டாக் போகவில்லை என்று உணர்ந்தான்.
‘ இப்போ என்ன பண்ணலாம் ? ‘ கடிந்து கொண்டான்.
‘ சரி நானே ஆரம்பிக்கிறேன் ‘ தேவி சொன்னாள். குரலை லேசாக மென்மை ஆக்கினாள். மூச்சுடன் சேர்ந்து குரலும் இசைந்தது. மூச்சின் அனல் கற்றை ஃபோன் ஸ்பீக்கரில் உணர்ந்தான்.
‘ நீ என்ன போட்டிருக்க என்று கேட்டாள் ‘ தேவி கேட்டாள்.
‘ டீ ஷர்ட் அப்புறம் ஷார்ட்ஸ் ‘ அவன் பதில் சொன்னான்.
‘ ஓ , உன்னோட ப்ரா சைஸ் என்ன ? ‘ தேவி கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
‘ ம்ச்ச் ‘ அவன் துவண்டு போனான். தேவி மேலும் சத்தமாக சிரித்தாள்.
‘ தேவி ரொம்ப ஓவரா போற!’
‘ பின்ன என்னடா அடல்டரி டாக் ன்னு சொன்ன? அப்புறம் எதுக்கு டிரஸ் பத்தி யோசிக்கிற ‘ தேவி கேட்டாள்.
‘ அப்படி தானே ஆரம்பிக்க முடியும்’ அவன் சொன்னான்.
‘ பொண்ணு னா முழுசா மூடி இருக்கணும் நீங்க தொறந்து பாத்து சந்தோஷ படனுமா ? அப்போ தான் செக்ஸ் பத்தி யோசிக்க முடியுமா? ரொம்ப அமெச்சூரா இருக்கே ? இல்ல அமெச்சூரா இருக்கறது தான் பிடிக்குமா ? ‘ தேவி கேட்டாள்.
‘ இப்போ என்ன சொல்ல வர ‘ அவன் கடுப்பில் கேட்டான்.
‘ சரி டா , இப்போ நா டிரஸ் இல்லாம நூடா இருக்கேன் , என்ன பண்ணுவ ? ‘ தேவி கேட்டாள்.
‘ உடம்புல எல்லா எடத்துல முத்தம் குடுப்பேன் ‘ அவன் சொன்னான்
‘அப்புறம் ? ‘
‘ கழுத்துல கடிப்பேன் ‘ அவன் சொன்னான்.
‘ சரி சரி , படி படியா கீழ எறங்கி கால் வரைக்கும் போவ அப்புறம் என்ன ‘ தேவி கேட்டாள்.
‘ அப்புறம் மேட்டர் தான் ‘ அவன் சொன்னான்.
‘ ஏன் டா என்னென்ன போட்டிருக்கன்னு கேட்ட, எதுவும் போடலன்னு சொன்னா! உன்ன பாப்பேன்னு, பாத்து உன்னோட அழகை ரசிப்பேன், இப்படி ஒருத்திய ஆட்கொண்டத பத்தி சிலாகித்து ஒரு சில வார்த்தைகள் பேசுவன்னு நினைச்சா! நீ ஒரு வார்த்தை கூட சொல்லல, நேரா மேட்டர் தான்னு சொல்ற ‘ தேவி கேட்டாள்.
‘ என்னோட சந்தோஷம்லாம் முக்கியம் இல்ல , உனக்கு என்ன வேணுமோ அதை மட்டும் பண்ணிக்குவ ‘ தேவி மேலும் தொடர்ந்து கேட்டாள்.
‘ அப்படி இல்ல ‘ அவன் சொன்னான்.
‘ இப்போ என்னை கற்பனை செஞ்சி இருப்பியே ‘ தேவி கேட்டாள்.
‘ ஆமா ‘
‘ எப்படி வழ வழப்பான கால்கள் , சில்கி ஸ்மூத் கைகள்னு ‘ என்று கேட்டாள்.
‘ ஆமா ‘
‘ அதான் இல்ல ‘
‘ அப்புறம் ? ‘
இப்போ சில ஃபோட்டோஸ் அனுப்புறேன் பாரு ‘ என்று தேவி சொல்லிவிட்டு சில ஃபோட்டோஸ் அனுப்பினாள்.
அக்குள் பகுதி கருப்படைந்து இருந்தது , உள் துடைகள் ஸ்ட்ரேச் மார்க்ஸ் இருந்தது, கீழ் பின் பகுதிகளில் சிறு சிறு குண்டும் குழியுமாக இருந்தது. ரோமங்கள் நிறைந்த கால் பகுதி மேலும் , லேசாக பூசலான வயிற்று பகுதி அனுப்பி இருந்தாள்.
‘ ஃபோட்டோலாம் எப்படி ‘ தேவி கேட்டாள்.
‘ இதெல்லாம் எதுக்கு அனுப்புற ‘ அவன் கேட்டான்.
‘ என்ன கற்பனை பண்றப்போ இதோட கற்பனை பண்ணு, இப்படி தான் நா இருப்பேன் , அது மட்டும் இல்லாம என்ன பாரு , என்ன என்னையாவே பாரு ‘ தேவி சொன்னாள்.
‘ ஹ்ம்ம் ‘ அவன் பேச வார்த்தைகள் இல்லாமல் திகைத்தான்.
‘ சரி வா அடல்டரி ஆ பேசலாம் ‘ தேவி மென்மையான குரலில் சொன்னாள்.
முற்றும்