பதில் கடிதங்கள் படித்து அந்த கடிதங்களின் உடே வாழ துடங்கிவிட்டேன். உன் குரல் செவிகளில் ரீங்கரித்து கொண்டே இருந்தது. இந்த நொடி படிக்கும் பொழுது கூட. கர்ப்பணைக்கு தான் என்ன சக்தி நினைத்ததும் உன்னை மனதில் உருவபடுத்திவிடுகிறது.
சில சமயம் நம் கடிதங்களில் உள்ள வார்த்தைகள் கற்பனாவாத திறனாக தெரியக்கூடும் ஆனால் அந்த பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் மற்றும் புரியும். வெளி நாட்டில் வாழும் எந்த ஒரு மனிதரும் அந்த வார்த்தைகளின் ஆழம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வார்த்தை மற்றும் ஒரு புகைப்படம் எவ்வளவு கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டதென்று.
மொபைலின் வழியே உள் சென்று உன்னை தொட்டு விட முடியாதா உன் முகத்தின் ஸ்பரிசத்தை உணர முடியாதா? உன் கைகளை என் கைகளால் உரசும் பொழுது வரும் மயிர் கூச்சை உணரமுடியாதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைகிறது. மூலையை குடையும் நினைவுகள் , குடைந்து கொண்டே நெற்றியை உடைத்து வெளி வந்துவிடும் போலும்.
தனிமை – குழந்தையுடன் விளையாடுவது போலத் தான், நம்மால் ஒரு பொழுதும் அதை வெல்ல முடியாது.
கொதித்தெழும் பால், நெருப்பை குறைத்ததும் அடங்கி விடும் ஆனால் கொதிப்பதை நிறுத்துவதில்லை. அது போல தான் உன் நினைவுகளும், உன் கடிதங்களும்.
மேலும் சில கடிதங்கள்…