அம்மாவின் காதல் – 3

அத்தியாயம் 3

டமார் என்ற சத்தம் கேட்டு கை தவறி மொபைல் கீழே விழுந்தது. சிறு அசைவு காரில் ஏற்ப்பட்டது.  கண்மணி காரில் இருந்து இறங்குவதற்குள் நான்கு ஐந்து பேர் கூடி இருந்தனர். காரின் பின் பகுதியில் சிறு பள்ளம் ஏற்பட்டிருந்தது.

‘ ஏங்க வண்டிய கொஞ்சம் முன்னாடி தள்ளி  நிறுத்தியிருக்களாம் ல ‘ ஒருவர் சொன்னார்.

அதற்குள் கையை தரையில் ஊனி தன் முழங்காலை பைக்கின் அடியில் இருந்து இழத்து எழுந்து நின்றான் ஒரு இளைஞன்.

‘ கை கால்யெல்லாம் நல்லா ஒதரிக்கோ பா ‘ இன்னொருவர் சொன்னார்.

அந்த இளைஞனும் அதை செய்த பிறகு கண்மணியை பார்த்தான்.

‘ இது பிளைண்ட் ஸ்பாட் னு தெரியாத மா இந்த டர்ன் ல இப்படி நிறுத்தியிருக்க ‘ முன்னால் சொன்னவரே மீண்டும் சொன்னார்.

‘ சார் என் மேலயும் தப்பு இருக்கு , நானும் ஓவர் ஸ்பீட் ல வந்துட்டேன் , விடுங்க ‘ அந்த இளைஞன் சொன்னான்.

கூட்டம் களைந்து சென்றது. கண்மணி ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இது என்ன பிரச்சினை என்று திகைத்து போயிருந்தாள்.

‘ ஹலோ மேடம் !’ என்று இரு முறை கூவிய பிறகு சுயநினைவுக்கு வந்தாள் கணமணி.

‘ மன்னிச்சிடுங்க பிளீஸ் ! நா ஏதோ டென்ஷன் ல இங்க நிறுத்திட்டேன் ‘ கண்மணி சொன்னாள்.

‘ அட இட்ஸ் ஓகே. இவங்க இப்படி தான் பொண்ணுங்க வண்டி ஓட்டுனா எதாவது சொல்லுவானுங்க. என்னமோ டிரைவிங்கை ஆண்களுக்கு மட்டும் ரிசர்வ் பண்ண மாதிரி. ஒரு பொண்ணு பெரிய பைக்கோ இல்ல சூப்பரா கார் ஒட்டுனா இவங்களுக்கு ஒரு இன்செக்யூரிடி ‘ என சொல்லிவிட்டு பைக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

‘ நா அவசரமா ஆஃபீஸ் போகனும் …’ என்று கண்மணி சொல்லி முடிப்பதற்குள் அவன் பேச தொடங்கிவிட்டான்.

‘ என்ன வழக்கம் போல அப்பா கிட்ட பேசி பைக் ரிபேர் செலவ வங்கிக்கணுமா? நம்பர் சொல்லுங்க ‘ அந்த இளைஞன் மொபைலை கையில் எடுத்தான்.

கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஃபெமினிசம் பேசுனா, இப்போ அப்படியே மாத்தி பொண்ணுங்க அப்பா கிட்ட தான் எல்லாத்துக்கும் நிப்பாங்கன்னு நினைக்கிறான். சரி நமக்கென இங்க இருந்து தப்பிச்சா போதும் என மனதில் நினைத்துக்கொண்டாள்.

‘ அப்பா இல்லை என்னோட நம்பர் தரேன் ‘ என்று சொல்லி கண்மணி அவள் நம்பரை கொடுத்தாள்.

மீண்டும் காருக்கு வருவதற்குள் மகள் அனிதாவிடம் இருந்து பல மிஸ்டு கால் வந்திருந்தது. கண்மணிக்கு தெரியும் இந்நேரம் அனிதா தன் ஹோண்டா சிபிஆர் பைக்கில் கிளம்பியிருப்பாள் என்று.

உடனே அவளை அழைத்து நடந்ததை கூறி அவளை நேராக ஆபீஸ்க்கு வர சொன்னாள் கண்மணி.

அனிதா பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு. அம்மாவுக்கு காலையில் இருந்த இன்னல்களை காரமாக ஒரு சில வார்த்தைகளால் அமைத்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தாள். மேலும் ஒரு டீ கடை முன் வண்டியை நிறுத்தி டீ வாங்கி அதனுடன் ஒரு செல்ஃபி எடுத்து ‘மிஸ் யூ வித் தீ ஸ்ட்ராங் ஒன் ‘ என கேப்சன் தந்து அவளின் பாய்-ப்ரெண்ட்டிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினாள்.

*****

2 thoughts on “அம்மாவின் காதல் – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *