
மனைவிக்கு கடிதங்கள் – 4
மனைவிக்கு கடிதங்கள் 4 பாரதி போல பார்ப்பவையெல்லம் கவிதை ஆக்க முடியவில்லை எனக்கு. உவமைகள் எழுதி காதல் சொன்னது ஒரு காலம், சொல்வதற்கு உவமையே இல்லையென்று காதல் சொன்னதும் ஒரு காலம். எதார்த்தமாக சொல்வது இந்த காலம். எதார்த்தம்? பரவசம் இல்ல பக்தியும் காதலும் உண்டோ? கன்னத்தில் முத்தமிடும் பொது சிலிர்க்கும் காது மடலும் கூச்சம் ஏறும் தாடை முடிகளும் பற்றி எப்படி கவிதை எழுதாமல் இருக்க முடியும். எப்படி சொன்னால் என்ன சொல்கிறோமா என்பது தானே…