கடிதம் 1
வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்த அடுத்த நொடி தனிமை நாசிகளின் வழியே சென்று வயிற்றில் உணர முடிகிறதே! தனிமையாக இருப்பவரின் அறையின் வாசம் அது. படித்து முடித்த உடன் குடும்ப சுமைக்காக பட்டிணத்திற்கு சென்று வாங்கும் கொஞ்ச நெஞ்ச சம்பளத்தில் கிடைக்கும் இடத்தில் தங்கும் ஒவ்வொருவரின் தனிமையை உணர்கிறேன்.
வெறும் உன் புகைப்படத்தை மட்டும் பார்த்து கதறி அழுவதன் காரணம் என்ன? தாடைகள் இறுகி மயிர்கூச்சு உணர்கிறதே, அது தொடர்ந்து தொண்டையை கனம் ஆக்குகிறதே!
எச்சில் முழுங்க முடியா கனம் அது. கண்களில் அடைப்பெடுத்தது போல் நீர் வழிகிறதே என்னை அறியாமல் வாய் சத்தம் போட்டு அழுது அந்த கனத்தை குறைக்கிறது.
உன்னை மீண்டும் காண்பேன் என்று தெரிந்தும் மனம் துயரப்படுகிறதே !
உடன் இருக்கும் வரை அப்படியில்லை இப்படியில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தேன் ஆனால் இப்பொழுது உடன் இருந்தால் போதும் என்று மனம் பதபதைக்கிறதே.
இரவின் அமைதி கொருரமாக இருக்கிறதே. இந்த தனிமை அறையில் இருளின் பிடியில் உறக்கம் தான் வருகிறதே கனவிலாவது உன்னை கான.
உனக்கு கடிதம் எழுத உன்னை பற்றி யோசித்துக்கொண்டே சில கிலோமீட்டர் தூரம் வந்துவிட்டேன். கால்கள் வலித்தாலும் பரவாயில்லை இன்னும் சில கிலோமீட்டர் செல்ல ஆசைப்படுகிறேன். இந்த சாலைகளில் என் தனிமை நடை அது சீக்கிரம் முடியாதா ? உன் கை கோர்த்துக் கொண்டு கதை பேசிக்கொண்டு நெடும் தூரம் செல்வோம்.
மேலும் சில கடிதங்கள்…
தொடரும்