
மனைவிக்கு கடிதங்கள் 2
கடிதம் 2 இங்கே குளிர் அதிகமாகிடுச்சு, அதீத குளிரில் அடர்த்தியான போர்வைக்குள் உன் கதகதப்பை தேடுகிறேன். தேடி தேடியே உறங்குகிறேன், காலையிலும் அந்த கதகதப்பு இல்லயே என்று ஏமாற்றம் அடைகிறேன். ‘ ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் ‘ வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். சில காதல் வரிகளுக்குள் வாழ்க்கை அடங்கிவிடுகிறது.