
இறுதி ஊர்வலம் – அத்தியாயம் 1
எழுத்து : சபரி என்றோ ரயிலில் செல்லும்போது ஒரு பிணத்தை நடைமேடையில் வைத்திருந்ததை பார்த்து பதைபதைத்த என் நெஞ்சு, அந்த செய்தி கேட்டும் உணராத நெஞ்சின் நொடிகளாய் கழிந்தது ஏன்? இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களா இல்லை இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது பொறுமையாக சரி செய்து கொள்ளலாம் என்னும் என் அலட்சியத்தின் குற்றஉணர்ச்சியா.