
சுகுவுண்ட்டா
எழுத்து : சபரி மாலை முதுவெயில், மரங்களுக்கும், திருத்தணி மலை சுற்றி உள்ள குன்றுகளுக்கும் பின்னால் மறையும் நேரம். இளம்வயதினர் ஒரு புறம், பெண்கள் ஒரு புறம், சிறுவர்கள் ஒரு புறம் என சாணம் மொழுகிய அந்த மண் தரையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்தும் ஒருகலித்து படுத்தும் , சிரித்தவாறு உடலை அசைத்தும், நீண்ட நாள் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.