எங்களுக்கும் காலம் வரும்

எழுத்து : சபரி

ஆறு முதல் ஒன்பது மாதம் பயிர் வளர்த்த  மஞ்சள் கிழங்குகள் பல டன் கணக்கில் இருக்கும், அதை பல பகுதிகளாக பிரித்து பெரிய இரும்பு பீப்பாயில் வேறுகளுடன் இருக்கும் மஞ்சள் கிழங்குகள் நிரப்படும், பெரிய பள்ளம் தோண்டப்படும், பீப்பாயை அதனுள் வைத்து சுற்றி தீ மூட்டப்படும் சுமார் ஒரு மணி நேரம் வேகவைக்கப்படும், அதன் பின் அந்த பீப்பாய் நிறைய இருக்கும் மஞ்சள் கிழங்குகள் பூமியில் கொட்டி காயவைக்கப்படும், இரவு முழுக்க இது தொடரும்.

வெந்த மஞ்சள் கிழங்குகளின் வாசம் அந்த இடத்தை நிறைத்திருக்கும், ஒருதடவை நுகர்ந்தால் வாழ்நாளில் மறக்கமுடியாது. விரல் விரலை மஞ்சள் கிழங்குகள் அதன் வாசம் என வாழ்ந்து கொண்டிருக்கும் பண்ணையார் லயன் பாண்டியன், இன்றளவிலும் பல பணக்காரர்கள் பெயரில் லயன் இருக்கும் காரணம் தெரிந்ததே, பெருமை நிமித்தம். பாண்டியனுக்கு எந்த அளவு கதர் சட்டையின் மேல் ஆசையோ அந்த அளவுக்கு அதற்கான மரியாதையின் மேலும் ஆசை. பாண்டியனுக்கு ஒரு மகள் ஒரே ஒரு மகள், எந்த அளவு ஒற்றை பிள்ளைக்கு சொகுசு வாழ்க்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு சுகந்திரம் இருக்காது.  

தேவிகா, பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை பாண்டியனும் , அவர் மனைவி சாந்தியும் தேவிகாவுக்கு தந்தது செல்லம் மட்டும் தான். இரண்டு மூன்று வருடத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்தில் பெரிய ஆச்சரியம் இல்லை. தேவிகா நல்லா படிச்ச பொண்ணு, கருத்த பெண் , கருத்த முகத்திற்கே உண்டான ஒளிர் கன்னங்களும் நெற்றியும், மை தீட்டாமலே பெரிதாய் இருக்கும் கண்கள். இப்படி எந்த குறையும் இல்லாத தேவிகா. கல்வியா? செல்வமா? வீரமா? எல்லாமே இருக்கும் சிறந்த பெண்.

பாண்டியனின் அக்கா பாப்பாத்தி , அம்மையாரின் மகன் சிவா. பெரிய கல்வி இல்லை ,  ஆறடி உயரம் நீண்ட தோளென ஆண் அழகுக்கான இலக்கணம் எதும் இல்லை, நல்ல பகுத்தறிவு மற்றும் உலக அறிவு. பாப்பாத்தி அம்மா பாண்டியனை பார்க்க வந்தாங்க, பாண்டியன் சில மாப்பிள்ளைகள் படத்தை வெச்சி பேசிகிட்டு இருந்தாரு. பாப்பாத்தி அம்மா நிறைய சொத்தை தம்பி பேர்ல எழுதிட்டாங்க , அதனாலன்னு சொல்லமுடியாது  அக்கா மேல கொள்ள பாசம் பாண்டியனுக்கு, எத்தனையோ தடவை சிவாவுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துத்தர முயற்சி செய்தார் ஆனால் சிவாவுக்கு அதுல ஆர்வமில்லை.

பாப்பாத்தி அம்மா நம்ம தம்பித்தானேன்னு பொண்ணு கேக்கலாமான்னு யோசிச்சிகிட்டு இருந்தாங்க. என்னதான் சொத்தெல்லாம் விட்டுக்கொடுத்திருந்தாலும் பாண்டியனா உழைச்சி சேத்த சொத்து நிறைய, தகுதி தராதரம் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லிட்டானா உறவு முறிஞ்சிடுமே. எந்த உறவு வேணும்னு சொத்தெல்லாம் விட்டுக்கொடுத்தாலோ அது பயனிலாமா போயிடுமேன்னு யோசனைல இருந்தாங்க.

‘அக்கா, பாப்பாக்கு நிறைய வரன் வருது, நீ பாத்து நல்லதா சொல்றியா’ பாண்டியன் கேட்டான்.

‘சரி தம்பி’ பாப்பாத்தி சொன்னாள்.

ஓரிரு நாள் யோசித்தால் பாப்பாத்தி, பாண்டியனும் தான்.

‘சிவா, நம்ம தேவிக்கு மாப்பிள பாக்குறாங்க’ பாபதியம்மாள் சொன்னாள்.

‘அம்மா, நீ கேட்ட மாமா ஒத்துக்குவாரு ஆனா கேக்காத’ சிவா சொன்னான்.

‘ஏன்டா’

‘இல்லமா தேவி வசதியா இருந்த பொண்ணு அவ வேற நாம வேற’

பாப்பாத்தியை மேலும் குழப்பினான் சிவா.

‘இன்னைக்கு அக்கா மில்லுக்கு வந்து இருந்தாங்க’ பாண்டியன் சொன்னார்.

‘என்ன புதுசா சொல்றிங்க’

‘இல்ல, பாப்பாக்கு மாப்பிள பாக்குற விஷயம் சொன்னேன், அக்கா ஏதோ யோசனைல இருந்தாங்க’ பாண்டியன் சொன்னார்.

‘தேவி செல்லமா வளந்த பொண்ணு, ஆனா அண்ணி நல்லா பாத்துக்குவாங்க’ பாண்டியனோடு சேர்ந்து சாந்தியும் குழம்பினாள்.

யாரென்ன குழப்பத்தில் இருந்தாலும் தேவிக்கு ஒரு குழப்பமும் இல்லை, தன் விதி தருவதை ஏற்று கொள்வோம் என்ற எண்ணம். அப்படி இப்படியுமாக சில மாதங்கள் கழிந்தன, பாப்பாத்தியும் கேட்கவில்லை , பாண்டியனும் எதுவும் கேட்கவில்லை. கண்ணெதிரே இருக்கும் கரும் பெரும் யானையை யாரும் பார்க்காதது போல நடித்தால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படி இருந்தது. அப்பப்போ பார்த்துகொள்ளும் தேவியும் , சிவாவும் புன்னகை தவிர வேறெதுவும் பகிர்ந்துக்கொள்ளவில்லை. ஒரு வழியாக ஒரு மாப்பிளையை தேர்தெடுத்தார்கள்.  

‘பாப்பா இந்த மாப்பிளை உனக்கு கரெக்ட்’ சிவா சொன்னான்.

‘ஏன் மாமா’

‘நீ சொகுசா வாழந்த புள்ள, ஏதோ ஒரு வாழக்கை வாழ கூடாது’ சிவா தன்னை தானே குத்திக்கொண்டான்.

தேவிக்கு லேசாக புரிந்தாலும் பெரிது படுத்தாமல் புன்னகையில் கடந்தால்.

சில விஷயங்கள் புன்னகையால் கூட கடக்க முடியாது, இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு பயனில்லை, வாழப்போகும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என்றால் யாருக்கு தான் அப்படி வாழ பிடிக்கும். ஏதோ என்று தற்செயலாக மருத்துவ சோதனை செய்த தேவிகாவுக்கு வாழ்க்கையே  சோதனையாய் ஒரு வியாதி கண்டறியப்பட்டது. ரத்தப்புற்றுநோய், வீடே சூனியப்பட்டது. நிரந்தரமில்லா வாழ்வு அதற்கு எவ்வளவு ஆசை, குழந்தை கையில் இருக்கும் கண்ணாடி பொம்மை தான் நம் வாழ்வு.

தன் சொத்தில் முக்கால் பங்கு விற்றாகி விட்டது, சீக்கிரம் கண்டறியப்பட்டதோ இல்லை இறைவன் செயலோ தேவிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி கொண்டே வந்தது ஆனால் பாண்டியன் தான் முன் போல் இல்லை. கதரின் முறுக்கு குறைந்தது, மரியாதையின் மேல் இருக்கும் ஆசையும் தான். ஏற்கனவே பார்த்திருந்த மாப்பிள்ளை பின்வாங்கினர் பின்பு வேண்டாமென்றனர். தேவிகாவை பார்க்கக்கூட வரவில்லை, அவர்கள் மணமுடிக்க நினைத்தது பாண்டியன் சொத்தையா இல்லை மகளையா? பெரும்பாலான பணக்காரர்கள் சிந்திக்கவேண்டியது ஆனால் சிந்திக்கவேண்டாம் என்று நிராகரிப்பது.

ஐந்து வருடங்கள், பெரும் போராட்டம் , ஒவ்வொரு நாளும் போர்க்களம் போல இருந்தது தேவிகாவுக்கு, வாழ்வோ சாவோ ஒவ்வொரு நாளும் ஆசை தீர வாழ்ந்தாள். அன்றாடம் முகப்புத்தக பதிவில் வாழக்கையை விட்டுத்தராத தோரணை. நோயிக்கு எதிரான போரில் வென்றால் தேவிகா ஆனால் இரக்கமற்ற சமுதாயத்தை முடியவில்லை. ஒரு தடவை நோய்வைப்பட்டால் வாழ்நாள் முழுக்க அப்படி தான்.

மேலும் ஒரு வருடம் கழிய, பாப்பாத்தி பாண்டியனை பார்க்கவந்தால், இது புதிதல்ல ஆனால் அன்று நடந்தது புதிது.

‘தம்பி, நா கேட்டா நீ வேண்டாம்னு சொல்லமாட்ட , அதனால கேக்குறேன்’ பாப்பாத்தி ஆரம்பித்தாள்.

‘அக்கா வேண்டாம் கா , கேக்காத , நா நல்ல நிலைமைல இருக்கப்ப நீ கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன் ஆனா நீ கேட்கவேண்டாம்-னு தான் நினைச்சேன். இப்போ நீ கேக்கணும்னு எதிர்பார்க்க கூடாதுல’ பாண்டியன் தன்னை மீறி அழுதான்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை தம்பி, ஒவ்வொரு அப்பாக்கும் இருக்கும் எண்ணம் தான்’ பாப்பாத்தி சொல்லிவிட்டு தொடர்ந்தால்.

‘சிவாவுக்கு தேவிகாவை கல்யாணம் பண்ணிக்கொடுப்பா’ பாப்பாத்தி அம்மா ஒரு வழியை போட்டுடைத்தாள்.

பாண்டியனும் ஒற்றுக்கொள்ள தேவிகாவிடம் சொன்னார். தேவிகா சிவாவிடம் பேச எண்ணி சிவாவை சந்தித்தாள்.

‘மாமா முதல்லயே வீட்ல கேட்டிருக்கலாமுல’ தேவி கேட்டாள்.

‘இல்ல , அப்போ நீ வேற மாதிரி இப்போ வேற’ சிவா சொன்னான்.

‘அப்போ சொகுசா வாழ்ந்த பொண்ணு இப்போ சுகுசா வாழத்தேவையில்லையா?’ தேவி கேட்டாள்.

‘அப்படி இல்லமா, உன்னை வேற யாரும் கல்யாணம் பண்ணி ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு தான்’ சிவா சொன்னான்.

‘இல்ல மாமா, எனக்கு நோய் இருக்கிறதால நீங்க வாழக்கை தர வேண்டாம், தப்பா எடுத்துக்காதீங்க’ தேவி சொல்லிவிட்டு  நிமிர்ந்து நடந்தாள் எப்பொழுதும் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *